உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சந்திராபுரம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலுக்கு 17ல் கும்பாபிேஷகம்

சந்திராபுரம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலுக்கு 17ல் கும்பாபிேஷகம்

திருப்பூர்: திருப்பூர், சந்திராபுரம், இந்திரா நகரிலுள்ள ஸ்ரீசித்திவிநாயகர், ஸ்ரீபாலமுருகன், ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீகருப்பசாமி, ஸ்ரீசப்தகன்னிமார் கோவில் உள்ளது. கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்று, கும்பாபிேஷகம், வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிேஷக விழா பூஜைகள், நாளை (15ம் தேதி) திருவிளக்கு வழிபாடு, பிள்ளையார் வழிபாட்டுடன் துவங்குகிறது. முளைப்பாலிகை மற்றும் தீர்த்தம் எடுத்துவந்து, யாகசாலைகள் தயார்படுத்தப் படுகின்றன.யாகசாலை வேள்வி பூஜைகள், வேதமந்திரங்கள் ஒலிக்க, விமரிசையாக நடைபெறும். வரும், 17ம் தேதி அதிகாலை, 4:30 மணிக்கு, நான்காம் கால வேள்வி பூஜைகள் துவங்குகின்றன. நிறைவேள்வியை தொடர்ந்து, காலை, 6:50 மணி முதல், 7:20 மணிக்குள், கோபுர கலசம் மற்றும் மூலாலய மூர்த்திகளுக்கு கும்பாபிேஷகம் நடக்க உள்ளது.காலை, 8:30 மணிக்கு, மகா அபிேஷகம், அலங்கார பூஜை, தசதரிசனம், தசதானம் மற்றும் அன்ன தானம் நடைபெற உள்ளது. கும்பாபிேஷக விழாவை முன்னிட்டு, 16ம் தேதி மாலை, 6:20 மணிக்கு, ஆதன் பொன் செந்தில்குமார் தலைமையிலான பெருஞ்சலங்கையாட்டம்; 17ம் தேதி மாலை, அருணாசலம் தலைமையிலான பவளக்கொடி கும்மியாட்டமும் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர், விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ