குமுதா பள்ளி மாணவியர் கையுந்து பந்தில் சாதனை
திருப்பூர் : முதல்வர் கோப்பைக்கான ஈரோடு மாவட்ட அளவிலான கையுந்து பந்து போட்டியில் குமுதா பள்ளி மாணவியர் முதலிடம் பிடித்தனர்.இதன் மூலம், சென்னை நேரு விளையாட்டரங்கில் நடந்த மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றனர். இதில் குமுதா பள்ளி மாணவியர் மூன்றாமிடம் பெற்று வெண்கலப்பதக்கம் வென்றனர்.ஒவ்வொரு மாணவியரும் தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 1.50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வென்றனர்.இதேபோல், கடந்த மாதம் நாமக்கல்லில் நடந்த மண்டல அளவிலான கடற்கரை கையுந்து பந்து போட்டியில் பங்கேற்று மாநில போட்டியில் பங்கேற்க, குமுதா பள்ளி மாணவியர் தகுதி பெற்றனர். சென்னை மெரினாவில் நடந்த மாநில போட்டியில் மூன்றாம் இடம் பெற்று 50 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை வென்றனர். மாணவியரை, பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணைத்தாளாளர் சுகந்தி ஜனகரத்தினம், செயலாளர் டாக்டர் அரவிந்தன், இணைச்செயலாளர் டாக்டர் மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குனர் பாலபிரபு, முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.