உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குமுதா பள்ளி மாணவியர் தமிழக அணிக்காக தேர்வு

குமுதா பள்ளி மாணவியர் தமிழக அணிக்காக தேர்வு

திருப்பூர்: இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் நடைபெற உள்ள 6வது தேசிய அளவிலான 17 வயதுக்குட்பட்டோர் கையுந்து பந்து போட்டிக்கான தேர்வில், குமுதா பள்ளி பிளஸ் 1 மாணவிகள் கனிஷ்கா, ரித்திகா ஆகியோர் தமிழக அணிக்காக விளையாட தேர்வு பெற்றுள்ளனர். உ.பி., மாநிலம் பெராலி நகரில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். 19 வயதுக்குட்பட்ட 55 - 57 கிலோ எடைப்பிரிவினருக்கான மல்யுத்தப்போட்டியில் குமுதா பள்ளி பிளஸ் 1 மாணவி நேத்ரா தமிழக அணிக்காக விளையாட தேர்வு பெற்றுள்ளார். உ.பி., மாநிலம் மீரட்டில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க உள்ளார்.இவர்களை பள்ளித் தாளாளர் ஜனகரத்தினம், துணைத்தாளாளர் சுகந்தி ஜனகரத்தினம், செயலாளர் டாக்டர் அரவிந்தன், இணைச் செயலாளர் டாக்டர் மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குனர் பாலபிரபு, முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி உள்ளிட்டோர் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை