உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஏரிகள் மேம்பாடு அமைச்சர் ஆய்வு

ஏரிகள் மேம்பாடு அமைச்சர் ஆய்வு

திருப்பூர்; காங்கயம் பகுதியில், ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டிலுள்ள ஏரிகளை மேம்படுத்துவது குறித்து அமைச்சர் சாமிநாதன் ஆய்வு செய்தார்.ஆய்வு குறித்து அமைச்சர் கூறியதாவது:மக்களுக்கான வளர்ச்சி மற்றும் நலத் திட்டப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.காங்கயம், கீரனுார் ஊராட்சி காமாட்சிபுரத்தில் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 27.5 ஏக்கர் பரப்பு கொண்ட ஏரியில் நீர் செறிவூட்டப்படவுள்ளது. மறவபாளையம் ஊராட்சி செம்மங்குழி பாளையத்தில் 15.00 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் கனிமம் மற்றும் சுரங்கம் நிதியின் கீழ் 7.28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டியுள்ள தடுப்பணை; செம்மங்குழி பாளையத்தில் பவானி சாகர் பாசனப் பகுதியில் சேமிக்கப்படும் கசிவுநீரை குடிநீர் பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இது குறித்து துறை அதிகாரிகள் அறிக்கையின் படி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !