உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / லகு உத்யோக் பாரதி: நிர்வாகிகள் பொறுப்பேற்பு

லகு உத்யோக் பாரதி: நிர்வாகிகள் பொறுப்பேற்பு

திருப்பூர்; 'லகு உத்யோக் பாரதி' திருப்பூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா, சைமா சங்க கூட்டரங்கில் நடந்தது. மாவட்டத்துக்கான புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்று விழாவை தொடர்ந்து, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கும் நடந்தது. மாநில தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவராக ஸ்ரீதரன், செயலாளராக சரவணன், பொருளாளராக கணேசன் பொறுப்பேற்றனர். மாவட்ட தொழில் மைய மேலாளர் கார்த்திகைவாசன், துணை மேலாளர் சையத் ஆகியோர், அரசு திட்டங்கள் குறித்து விளக்கி பேசினர். குறிப்பாக, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் தொடர்பான எத்தகைய உதவிக்கும், லகு உத்யோக் பாரதியை அணுகலாம்; தொழில்துறைக்கு என்றும் வழிகாட்டியாக இருப்பார்கள் என அறிவுறுத்தப்பட்டது. தேசிய இணை பொதுசெயலாளர் மோகனசுந்தரம், கோவை தொழில்வல்லுனர் விஜயராகவன், மாநில பொதுசெயலாளர்கள் ரவிச்சந்திரன், கல்யாணசுந்தரம், பாலகிருஷ்ணன், துணை தலைவர் திருநாவுக்கரசு, மாநில செயற்குழு உறுப்பினர் கைலைராஜன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை