உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மரபு சார்ந்த மரங்களால் பசுமையாகும் நிலங்கள்; வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் மரக்கன்றுகள் நடவு

மரபு சார்ந்த மரங்களால் பசுமையாகும் நிலங்கள்; வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் மரக்கன்றுகள் நடவு

உடுமலை; வனத்துக்குள் திருப்பூர் -11 திட்டத்தின் கீழ், உடுமலை பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமடைந்துள்ளது. மாவட்டத்தை பசுமையாக்கும் வகையில், வனத்துக்குள் திருப்பூர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு, 11 வது திட்டத்தின் கீழ், 3 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயித்து பணிகள் துவங்கி, நடந்து வருகிறது. உடுமலை பகுதிகளில், பசுமை வளர்க்கும் பணியாகவும், மரச்சாகுபடி திட்டமாகவும், மரக்கன்றுகள் நடுவதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நீர்ப்பற்றாக்குறை, தொழிலாளர்கள் பற்றாக்குறையால், விவசாயம் செய்ய முடியாத நிலையில், பயன் தரும் மரக்கன்றுகள் நடவு செய்து, மண் வளத்தையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ், கல்லாபுரம் விவசாயி தேவிக்கு சொந்தமான நிலத்தில், மண்ணின் மரபு சார்ந்த மரமான மகா கனி மரக்கன்று, 425 நடவு செய்யப்பட்டது. அதே போல், குடிமங்கலம் ஒன்றியம், பெரியபட்டி , பெரிய குமாரபாளையம், மகுடீஸ்வரன்- தமிழ்ச்செல்வி ஆகியோருக்கு சொந்தமான நிலத்தில், தேக்கு, மகா கனி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. உடுமலை குறிஞ்சேரியிலுள்ள செல்வநாயகிக்கு சொந்தமான நிலத்தில், ஆயிரம் மகா கனி மரக்கன்றுகளும், குமிழ், 50, சந்தனம், 50 என, 1,100 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ், விவசாய நிலங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கோவில், பள்ளிகள், அரசுக்கு சொந்தமான நிலங்கள், கோழிப்பண்ணை, தொழிற்சாலை வளாகங்களில் மரக்கன்றுகள் நடவு செய்து தரப்படுகிறது. மரக்கன்றுகள் நடவு செய்து முறையாக பராமரித்து, மரமாக வளர்க்கும் பசுமை பணியில் ஆர்வம் உள்ளவர்கள், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என திட்ட குழுவினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை