எலுமிச்சை விலை சரிவு
வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த போது எலுமிச்சை, உழவர் சந்தையில் கிலோ, 170 ரூபாய்; தென்னம்பாளையத்தில் கிலோ, 150 ரூபாய்க்கு விற்றது. ஐப்பசி மாத முகூர்த்த நாட்களிலும் விலை குறையவில்லை. கடந்த பத்து நாட்களாக திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் துாறல் மழை தொடர்கிறது. வானிலை மாற்றம் ஏற்பட்டு, குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது. எலுமிச்சை தேவை சற்று குறைந்து, தேக்கமடைய துவங்கியுள்ளதால், கிலோ, 120 ரூபாய்க்கு வந்துள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு, கிலோவுக்கு, 30 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது.