உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வரும்முன் காப்போம் மருத்துவ முகாம்

வரும்முன் காப்போம் மருத்துவ முகாம்

திருப்பூர்: திருப்பூர், கூத்தம்பாளையம், முருகு மெட்ரிக் பள்ளி வளாகத்தில், தமிழக அரசின் வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.முகாமை, மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார். துணை மேயர் பாலசுப்ரமணியம், மண்டல தலைவர் கோவிந்தராஜ், துணை கமிஷனர் சுந்தரராஜன், உதவி கமிஷனர் முருகேசன், கவுன்சிலர்கள் கவிதா, லோகநாயகி முன்னிலை வகித்தனர். மாநகர் நலஅலுவலர் முருகானந்த் வரவேற்றார்.முகாமில் மருத்துவர் குழுவினர் பல்வேறு பிரிவுகளில் மருத்துவ பரிசோதனை, சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், நோயாளிகளுக்கு மருந்துப் பெட்டகம் ஆகியன வழங்கப்பட்டது.முகாமில் நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றுபயன் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை