உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நுாலக வாரவிழா புத்தக கண்காட்சி

நுாலக வாரவிழா புத்தக கண்காட்சி

உடுமலை; உடுமலை இரண்டாம் கிளை நுாலகத்தில், நுாலக வாரவிழா கொண்டாடப்பட்டது.தேசிய நுாலக வாரவிழாவையொட்டி, உடுமலை உழவர் சந்தை ரோடு இரண்டாம் கிளை நுாலகத்தில் புத்தக கண்காட்சி நடந்தது. விழாவின் துவக்கமாக, நுாலக தந்தை ரங்கநாதன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.தொடர்ந்து செல்வி கேஸ் உரிமையாளர் அய்யப்பன் புத்தக கண்காட்சியை துவக்கி வைத்தார். இரண்டாம் கிளை நுாலகத்தின் நுாலகர் பூரணி தலைமை வகித்தார். நுாலகர்கள் மகேந்திரன், அஷ்ப்சித்திகா, பிரமோத் கண்காட்சியை ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை