குறள் வழி வாழ்ந்தால் வாழ்க்கை சிறக்கும்
திருக்குறளை பயிலும் போதெல்லாம் புதிய புதிய சிந்தனைகள் தோன்றுகின்றன; மொழித்திறனை வளர்க்கிறது. மனதில் நினைத்து, நினைத்து இன்பமுற சிறந்த இலக்கியம் திருக்குறள். நம் வாழ்வை திறம்பட வாழவும், மனித சமுதாயம் குற்றமற மேலோங்கி வளரவும், நிலைத்த கருத்துகளை பொழிவதாக படிப்பவர்கள் உணரலாம்.'மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்நன்கலம் நன்மக்கட் பேறு'பெண்களே குடும்பத்தை காப்பவர், குழந்தைகளை மேன்மையடைய செய்பவர் என விளக்கவே மனைமாட்சி என்ற அதிகாரத்தை திருவள்ளுவர் செதுக்கியுள்ளார். நல்ல குழந்தைகளே குடும்பத்தை ஒளிபெறச் செய்பவர். இன்றைய பரபரப்பான உலகில் நீண்ட விளக்கங்கள் பயனளிப்பதில்லை, இதை உணர்ந்தாலே போதும்.கல்வியை குற்றமற பெற வேண்டும் என்று கூறிய பொய்யாமொழி புலவர், இன்னா செய்தாருக்கு நல்லனம் செய்ய வேண்டும். நல்லது செய்யவில்லை என்றால் கற்பது பயனே இல்லை என்கிறார்.அனைத்து கருத்துக்களுக்கு மகுடமான அனைத்து மக்களும் வாழ்க்கையில் உறுதிபட கொள்ள வேண்டிய நெறிமுறையாக மனதுக்கண், மாசு இலன் ஆதல் என்பதை விளக்கி உலகம் உய்ய உன்னத வழிகாட்டியான திருக்குறளை கற்போம்; திருக்குறளை போற்றுவோம்; திருக்குறள் வழி நடப்போம்; திருக்குறளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வோம்; வாழ்க வள்ளுவம்.- ஆனந்த், பட்டதாரி தமிழ் ஆசிரியர்,கருவலுார் அரசு மேல்நிலைப்பள்ளி.