உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மது பாட்டில்கள் குட்கா பறிமுதல்

மது பாட்டில்கள் குட்கா பறிமுதல்

திருப்பூர்: திருப்பூர் தெற்கு போலீசார், மத்திய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சந்தேக அடிப்படையில், ரவீந்திர கரடா, 30 என்பவரை சோதனையிட்டபோது, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா வைத்திருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், 45 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.  வீரபாண்டி, குப்பாண்டம்பாளையம் பகுதியில் டாஸ்மாக் பார் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் அங்கு சென்றனர். சட்ட விரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த மணிகண்டன், 37 என்பவரை கைது செய்து, 180 மி.லி., அளவுள்ள, 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை