சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாம்
உடுமலை; உடுமலை நகரில் சாலையோர வியாபாரிகளுக்கு, கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நேற்று துவங்கியது. வரும், டிச., 2ம் தேதி வரை நடக்கிறது.உடுமலை நகராட்சியில், சாலையோர வியாபாரிகள், வாழ்வாதார மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், கடனுதவி வழங்குவதற்கான சிறப்பு முகாம், உடுமலை நகராட்சி அலுவலகத்தில் நேற்று துவங்கியது.வரும், டிச., 2ம் தேதி வரை, தினமும் காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை நடக்கும் இம்முகாமில், உடுமலை நகராட்சி பகுதியிலுள்ள சாலையோர வியாபாரிகள் பங்கேற்று பயன்பெறுமாறு, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.