மேலும் செய்திகள்
ஸ்டான்லியில் பெண் உயிரிழப்பு உறவினர்கள் முற்றுகை
10-Jan-2025
அவிநாசி; அவிநாசி அருகே ராணுவத்துக்கு தேர்வான தங்கள் மகனை உறவினர்களுடன் ஆசீர்வதித்து பெற்றோர் வழி அனுப்பி வைத்தது, பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.அவிநாசி ஒன்றியம், செம்பியநல்லுார் ஊராட்சி, ஸ்ரீராம் நகர் பகுதி, பாரதி வீதியில் வசித்து வருபவர் லாரி டிரைவர் தங்கராஜ். இவரின் மனைவி நாகஜோதி அருகிலுள்ள பனியன் கம்பெனியில் டெய்லர். தம்பதியருக்கு சுந்தர்ராஜ், 25, சதீஷ்குமார் 22, என இரு மகன்கள் உள்ளனர். சுந்தர்ராஜ் பி.எஸ்.சி., (சி.டி.,) முடித்து,ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற மன உறுதியுடன் லட்சியத்துடனும் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டார்.உடல் தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று, சென்னை ஆவடியில் உள்ள சி.ஆர்.பி.எப்., - பிரிவில் பணியாற்ற தேர்வாகியுள்ளார். நேற்று பணியில் இணைய சென்னைக்கு புறப்பட்ட சுந்தர்ராஜ் , பெற்றோர் மற்றும் உறவினர்கள் புடைசூழ, ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழியனுப்பி வைத்தனர்.இது குறித்து சுந்தர்ராஜ் கூறுகையல், ''எனது தாய் மாமா காஷ்மீர் எல்லையில் ராணுவத்தில் படை வீரராக பணியாற்றி வீரமரணம் அடைந்தார். அவர் மீதுள்ள பாசம் மற்றும் அவர் தாய்நாட்டின் ராணுவத்தின் மீது வைத்திருந்த மரியாதை என்னை ,ராணுவத்தில் சேர ஊக்கப்படுத்தியது. அதனை எனது பெற்றோரிடம் தெரிவித்ததில், முழு சம்மதம் தெரிவித்தனர் இதனால் முழு ஈடுபாட்டுடன் பயிற்சிகள், தேர்வுகள் எழுதி வெற்றி பெற்றேன். இப்போது சி.ஆர்.பி.எப்.,-ல் வேலை கிடைத்துள்ளது. இதனை நம் தாய் நாட்டுக்காக பணியாற்ற கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன்,'' என்றார்.ராணுவத்தில் பணியாற்ற செல்லும் வீரரை, வாழ்த்தி வழியனுப்பி வைத்த சுந்தர்ராஜ் தம்பதியர் மற்றும் அவரின் உறவினர்களை, ஸ்ரீராம் நகர் பகுதி பொதுமக்கள் பெரிதும் நெகிழ்ச்சியுட் பாராட்டினர்.----ராணுவத்தில் பணியாற்ற செல்லும் சுந்தர்ராஜை வழியனுப்பி வைத்த அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள்.
10-Jan-2025