உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காதல் மனைவி அடித்து கொலை; 11 ஆண்டுக்கு பின் கணவர் கைது

காதல் மனைவி அடித்து கொலை; 11 ஆண்டுக்கு பின் கணவர் கைது

திருப்பூர் ; தாராபுரத்தில், காதல் மனைவியை கொலை செய்து, தலைமறைவாக இருந்த கணவரை, 11 ஆண்டுகளுக்கு பின் போலீசார் கைது செய்தனர்.பீஹாரை சேர்ந்தவர் சுரேஷ் ஷா, 45. கடந்த 2007ல், திருப்பூரில் தங்கி ஸ்வீட் கடையில் வேலை செய்தார். அப்போது, திருநெல்வேலியை சேர்ந்த செல்வி என்பவரை காதலித்து, திருமணம் செய்து, தாராபுரத்தில் குடியேறினார்.இருவரும் பஸ் ஸ்டாண்ட் அருகே பானி பூரி வியாபாரம் செய்து வந்தனர். நடத்தையில் சந்தேகம் காரணமாக, 2013ல், மனைவியை அடித்து கொலை செய்து, சுரேஷ் ஷா தலைமறைவானார். தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணவரை தேடி வந்தனர்; 11 ஆண்டாக சிக்கவில்லை.திருப்பூர் எஸ்.பி., அபிேஷக் குப்தா உத்தரவில், தனிப்படை போலீசார், பீஹாருக்கு சென்று அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரித்தனர். அதையடுத்து, டில்லியில் பதுங்கியிருந்த சுரேஷ் ஷாவை, போலீசார் கைது செய்து, திருப்பூருக்கு நேற்று அழைத்து வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை