மேலும் செய்திகள்
மத்திய அரசை கண்டித்து மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
28-May-2026
அவிநாசி: கேரளா முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்தனர். இதனை கண்டித்து, அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் மா.கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றிய குழு உறுப்பினர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் வேலுசாமி, சண்முகம் உட்பட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்றவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.
28-May-2026