உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அங்காள பரமேஸ்வரி கோவிலில் மஹா கும்பாபிேஷகம் கோலாகலம்

அங்காள பரமேஸ்வரி கோவிலில் மஹா கும்பாபிேஷகம் கோலாகலம்

அவிநாசி; அவிநாசி, காந்திபுரத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. திருப்பணிகள் நிறைவுற்று நேற்று கும்பாபிேஷகம் கோலாகலமாக நடைபெற்றது. நேற்று அதிகாலை நான்காம் கால யாக பூஜைகளில் கலசங்கள் புறப்பாடு நடைபெற்று, விமான கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம், ஸ்ரீ சித்தி விநாயகர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகள் கும்பாபிஷேகம், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரிக்கு கும்பாபிஷேகம் ஆகியவை நடந்தன. தொடர்ந்து அகிலம் காக்கும் அங்காள பரமேஸ்வரிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. மாலையில் ரிஷப வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி திருவீதி உலா நடந்தது. கும்பாபிஷேக விழாவில், ஹிந்து அறநிலையத்துறையினர், அவிநாசி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அறக்கட்டளை நிர்வாகிகள், ரோமரிஷி கோத்திர சிவாச்சாரியார் குழுவினர்கள், குல தெய்வ சமூகத்தினர் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். யாகசாலை பூஜைகள் பெங்களூரு ஸ்ரீஸ்ரீகுரு குல வேதபாடசாலை முதல்வர் சுந்தரமூர்த்தி சிவம் தலைமையில், சிவாச்சார்யார்கள் மேற்கொண்டனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தேவேந்திரகுல வேளாளர் சமூக திருமண மண்டப அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை