உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தண்ணீர்பந்தல் விநாயகருக்கு நாளை மஹா கும்பாபிேஷகம்

தண்ணீர்பந்தல் விநாயகருக்கு நாளை மஹா கும்பாபிேஷகம்

திருப்பூர்; 'தண்ணீர் பந்தல் விநாயகர்' எனப்படும், சித்தி விநாயகர் கோவில் கும்பாபிேஷகம் நாளை நடக்கிறது.கொங்கு சோழர்கள் காலத்தில், ஆண்டிபாளையம் குளம் வெட்டப்பட்டு, வாய்க்கால் அமைக்கப்பட்டது. அப்போது குளத்தின் கிழக்கே வரதராஜபெருமாள் கோவிலும், மேற்கு கரை அருகே, தண்ணீர் பந்தலும் ஆதிவிநாயகர் கோவிலும் அமைக்கப்பட்டது.அங்கு கால்நடையாக சென்று வரும் மக்கள் வசதிக்காக, சத்திரம், தண்ணீர் பந்தல், கிணறு ஆகிய வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.சின்னாண்டிபாளையம் பிரிவு அருகே உள்ள, 300 ஆண்டுகள் பழமையான விநாயகர் கோவில் புதுப்பிக்கப்பட்டு, 2008ல் கும்பாபிேஷகம் நடந்தது. அதனை தொடர்ந்து, சித்திவிநாயகர் கோவில் கும்பாபிேஷகம், நாளை (2ம் தேதி) நடக்கிறது. ஏற்பாடுகளை, கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை