அரசு பள்ளிகளுக்கு பராமரிப்பு நிதி ஒதுக்கீடு
உடுமலை; அரசு பள்ளிகளுக்கு, நடப்பு கல்வியாண்டு பராமரிப்பு செலவினங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.நடப்பு கல்வியாண்டு துவங்கி, ஒரு மாதமான நிலையில், பள்ளிகளுக்கு பராமரிப்பு, பள்ளிகளுக்கான பொருட்களை வாங்குவதற்கு நிதி ஒதுக்க, தலைமையாசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.இதன் அடிப்படையில், அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில், குறைந்த பட்சம், 10 ஆயிரம் முதல் அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையை முன்னுரிமை அடிப்படையில் செலவு செய்ய வேண்டும். கை கழுவும் வசதி, பாதுகாப்பான குடிநீர் உறுதி செய்ய வேண்டும்.மழைகாலம் துவங்க உள்ளதால் துாய்மை பணி, கட்டடப் பராமரிப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும். வழிகாட்டுதல்களை பின்பற்றி பள்ளிக்கு உரிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே தொகை செலவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.