உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மக்காச்சோளம் பயிர் காப்பீடு; வரும் 30ம் தேதி கடைசி நாள்

மக்காச்சோளம் பயிர் காப்பீடு; வரும் 30ம் தேதி கடைசி நாள்

திருப்பூர்; பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் நெல், மக்காச்சோளம் பயிர்களுக்கு காப்பீடு செய்ய, வரும் 30ம் தேதி கடைசிநாள்.இதுகுறித்து திருப்பூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) கிருஷ்ணவேணி அறிக்கை:திருப்பூர் மாவட்டத்தில், 2024 - 25ம் ஆண்டில், சிறப்பு மற்றும் ராபி பருவத்தில் பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த, பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் நெற்பயிர் காப்பீடு செய்வதற்கு, இம்மாதம் 15ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அவகாசம், வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.நெற்பயிருக்கு காப்பீடு கட்டணமாக, ஏக்கருக்கு 573 ரூபாய்; மக்காச்சோளத்துக்கு, ஏக்கருக்கு 542 ரூபாய் செலுத்தவேண்டும். மாவட்டத்தில், நடப்பு பருவத்தில், இதுவரை 6,625 ஏக்கருக்கு நெல் பயிரிடப்பட்டுள்ளது; ஆனால், 236 ஏக்கருக்கு மட்டுமே விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர். மக்காச்சோளம் 26,411 ஏக்கரில் நடவு செய்யப்பட்டுள்ள நிலையில், 1,063 ஏக்கருக்கு மட்டுமே காப்பீடு செய்துள்ளனர்.கடைசி நாள் வரை காத்திராமல், வரும் 30ம் தேதிக்கு முன்னதாக பயிர்களை காப்பீடு செய்துகொள்ள வேண்டும். காப்பீடு செய்யும்போது, சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயர், புல எண்கள், பரப்பு, வங்கி கணக்கு எண் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்.இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை