உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பூட்டிய வீட்டை உடைத்து நகை திருடிய ஆசாமி கைது

பூட்டிய வீட்டை உடைத்து நகை திருடிய ஆசாமி கைது

பல்லடம் : சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட இடையர்பாளையம், கள்ளிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்யா 35; தனியார் ஊழியர்.கடந்த, ஜன., மாதம், 12ம் தேதி குடும்பத்துடன் ஊருக்குச் சென்று விட்டு, 19ம் தேதி வீடு திரும்பினார். வீட்டின் கதவு, பீரோ உடைக்கப்பட்டு, 12.5 சவரன் நகை திருடு போனது.சுல்தான்பேட்டை போலீசில் சூர்யா புகார் அளித்தார். விசாரணை மேற்கொண்டு வந்த சுல்தான்பேட்டை போலீசார், திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த தனசேகரன், 37 என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், சூர்யா வீட்டில் நகை திருட்டில் ஈடுபட்டது இவர் தான் என்பது உறுதியானது. தனசேகரன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவரிடமிருந்து, 7 சவரன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது வேறு ஏதேனும் குற்ற வழக்குகள் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ