உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / டூ வீலர் திருடிய ஆசாமிக்கு சிறை

டூ வீலர் திருடிய ஆசாமிக்கு சிறை

திருப்பூர்; திருப்பூரில் இரு சக்கர வாகனங்கள் திருடிய நபருக்கு இரண்டாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டில் திருப்பூர் நகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகனங்கள் திருடு போனது. இது தொடர்பாக ரசூல் மொய்தீன், 30 என்பவர் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளியே வந்த அவர் தலைமறைவானார். வழக்கு விசாரணைக்கும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. கடந்த 2019ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்த அவர் மீது பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. கடந்த வாரம் அவர் போலீசாரிடம் பிடிபட்டார். அவர் மீதான வழக்கு திருப்பூர் ஜே.எம். எண் 2 மாஜிஸ்திரேட் செந்தில் ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் உதவி அரசு வக்கீல் கவிதா ஆஜரானார். இதில் ரசூல் மொய்தீனுக்கு இரண்டாண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி