உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  மேலாண்மை குழு உறுப்பினர்கள் கூட்டம்

 மேலாண்மை குழு உறுப்பினர்கள் கூட்டம்

அவிநாசி: அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், கல்லுாரி நிறுவன மேலாண்மை குழு உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) ஹேமலதா வரவேற்றார். கல்லுாரியின் ஆட்சி மன்ற உறுப்பினர்கள் வணிக நிறுவன உறுப்பினர்களிடம் மாணவர்களின் மேம்பாட்டுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க கேட்டுக் கொண்டனர். இக்கூட்டத்தில் நிறுவன பிரதிநிதிகள் சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குநர் சந்திரன், டூவின் நிர்வாக இயக்குநர் கருணாநிதி, ஆர்.பி.ஆர். நிர்வாக இயக்குநர் ராஜாதி சந்தானம், களம் அறக்கட்டளை சதீஷ்குமார், திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் வழிகாட்டும் மைய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ், பெற்றோர் பிரதிநிதி சுஜா, மாணவ பிரதிநிதி தமிழரசன் பங்கேற்றனர். கல்லுாரி நிறுவன மேலாண்மை குழு உள் உறுப்பினர்கள் கீதா மற்றும் அருண் ஆகியோர் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ