மேலும் செய்திகள்
சொர்க்கம் என்பது நமக்கு சுத்தமுள்ள ஊருதான்!
13-Jul-2025
திருப்பூர்; திருப்பூர் நகரம் மற்றும் ஊரகப்பகுதிகளில் குவிந்து கிடக்கும் குப்பை, எரியூட்டப்படுவது, கடும் சுகாதார கேடு ஏற்படுத்துவதாக மாறியுள்ளது. திருப்பூர் நகர மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள உள்ளாட்சி நிர்வாகங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை அகற்றுவதற்கான கட்டமைப்பு இல்லாததால், ரோட்டோரம் குப்பை குவிந்து கிடக்கின்றன. திருப்பூர் மாநகராட்சி எல்லை உட்பட பிற ஊராட்சி எல்லைகளில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் தீயிட்டு எரியூட்டப்படுவதால் எழும் புகை, சுற்றியுள்ள மக்களுக்கு பெரும் சுகாதார கேடு ஏற்படுத்தி வருகிறது. குப்பை பிரச்னை என்பது, மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை திடமாக செயல்படுத்த வேண்டிய கட்டாயம், திருப்பூர் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
13-Jul-2025