உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மங்கையர் மனங்கவரும் ஆரஞ்சு ஸ்கை எக்ஸ்போ

மங்கையர் மனங்கவரும் ஆரஞ்சு ஸ்கை எக்ஸ்போ

திருப்பூர் : திருப்பூர், தாராபுரம் ரோடு, வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் ஆரஞ்சு ஸ்கை, கார்னிவல் எக்ஸ்போ - ஷாப்பிங், உணவு திருவிழா மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி நேற்று துவங்கியது.இதனை, டிவி தொகுப்பாளர் தியா மேனன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். கிட்ஸ் கிளப் தாளாளர் மோகன் கார்த்திக், லக்கி கேர்ள் நிறுவனர் விஜி, சவுமியா மற்றும் கண்காட்சி நிர்வாகிகள்அக் ஷயா, அமிர்தவர்ஷினி, அனுமித்ரா உட்பட பலர் உடனிருந்தனர்.தமிழகத்தின் பல பகுதியில் உள்ள பிரபல உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிபடுத்தியுள்ளனர். 120க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டு, இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவருக்கும் தேவையான ஆடை ரகங்கள், வீட்டு அலங்கார பொருட்கள், பேஷன் நகைகள் மற்றும் 249 ரூபாய் முதல் சேலைகள், 999 ரூபாய்க்கு குர்தீஸ், பட்டு சேலை, சல்வார் ரகங்கள், பெட்ஷீட், டிசைனர் வளையல்கள் போன்றவற்றை மிக குறைந்த விலையில் விற்பனை செய்கின்றனர். 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசு உண்டு.இத்துடன் குழந்தைகள் விளையாடுவதற்கென்றே தனி இட வசதி மற்றும் உணவு திருவிழா,பாட்டு கச்சேரி, மேஜிக் ஷோவும் நடக்கிறது. இன்றும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ