உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மங்கலம் கதிரவன் பள்ளி பிளஸ் 2 தேர்வில் அபாரம்

மங்கலம் கதிரவன் பள்ளி பிளஸ் 2 தேர்வில் அபாரம்

திருப்பூர்,; மங்கலம் கதிரவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இப்பள்ளி மாணவி கரிஷ்மா, 580 மதிப்பெண் பெற்று முதலிடம், உயிரியல் பாடப்பிரிவை சேர்ந்த வர்ஷினி, 579 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், கீர்த்தி, 568 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம். கணினி பயன்பாடு பாடத்தில் இரண்டு மாணவர், வணிகவியலில் இரண்டு மாணவர் நுாறுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.கணக்கு பதிவியியல், வேதியியல், இயற்பியல், கணிதம் மற்றும் பொருளியல் பாடத்தில் மாணவ, மாணவியர், 98 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர். 30 மாணவர்கள், 50 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களையும் பள்ளி செயலாளர் ராஜ்குமார், பள்ளி முதல்வர் காந்திபிரியதர்ஷினி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.மங்கலம், கதிரவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஸ்ரீசரண்யா ராஜ்குமார் கூறுகையில், ''தற்போது, எல்.கே.ஜி., முதல் பிளஸ் 1 வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதல் ஐந்து மதிப்பெண்களை பெறும் மாணவர்களுக்கு சிறப்பு கட்டணச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. 490 மதிப்பெண்களுக்கு மேல் பெரும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் முற்றிலும் இலவசம். பிளஸ் 1 பாடப்பிரிவில் நான்கு பாடப்பிரிவுகளில் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தொடர்புக்கு 97151 06465, 63815 03581 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை