மருத்துவ முகாம்; 896 பேர் பயன்பெற்றனர்
திருப்பூர்: இடுவம்பாளையம் அரசு பள்ளி வளாகத்தில், வரும் முன் காப்போம் திட்டத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது.எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் குத்து விளக்கேற்றி முகாமைத் துவக்கி வைத்தனர்.துணை மேயர் பாலசுப்ரமணியம், மண்டல குழு தலைவர் பத்மநாபன், கமிஷனர் (பொறுப்பு) சுல்தானா முன்னிலை வகித்தனர். நகர் நல அலுவலர் (பொறுப்பு) கலைச்செல்வன் முன்னதாக வரவேற்றார்.அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மருத்துவர் குழுவினர் முகாமில் பங்கேற்றவர்களுக்கு பரிசோதனை, ஆலோசனை மற்றும் மருந்துகளும் வழங்கினர். முகாமில், மொத்தம் 896 பேர் பங்கேற்று பயன்பெற்றனர்.