உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மருத்துவ ஊழியர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்

மருத்துவ ஊழியர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்

திருப்பூர்; மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர், திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜிடம் நேற்று அளித்த மனு:உடுமலை தாலுகா, செல்லப்பம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைத்தில், ஜடையாம்பாளையத்தை சேர்ந்த பிரியா, 21, மக்களைத்தேடி மருத்துவ ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர், கடந்த 15ம் தேதி பணி நேரத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.இவரது குடும்பத்தினருக்கு அரசு நிவாரணம் வழங்கவேண்டும். விபத்து ஏற்படுத்திய வாகனத்தையும், டிரைவரையும் இதுவரை போலீசார் கண்டு பிடிக்கவில்லை. குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்கவேண்டும். மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்களின் பணிச்சுமையை குறைக்கவேண்டும்.இவ்வாறு, அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ