மேலும் செய்திகள்
விழிப்புணர்வு நிகழ்ச்சி
30-Aug-2024
உடுமலை : உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்களுக்கான கூட்டம் நடந்தது.உடுமலை சுற்றுவட்டார அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல் நிலைப்பள்ளி நாட்டுநலப்பணி திட்ட அமைப்புகளின் சார்பில், சிறப்பு முகாம்கள் நடத்துவது குறித்து, என்.எஸ்.எஸ்., அலுவலர்களுக்கான சிறப்பு கூட்டம், உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.கூட்டத்தில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., அலுவலர் அம்ஜத் வரவேற்றார்.எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி திட்ட அலுவலர் சேஷநாராயணன் தலைமை வகித்தார்.விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி திட்ட அலுவலர் சுமதி முன்னிலை வகித்தார். பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி திட்ட அலுவலர் சரவணன், ஏழு நாள் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமில், செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து விவரித்தார்.முகாமில்,போதைப்பொருள் விழிப்புணர்வு, மருத்துவ முகாம், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல், கிராம மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது, மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிப்பது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளிஆசிரியர் பத்மாவதி, பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி திட்ட அலுவலர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.உடுமலை வட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட, திருப்பூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளி திட்ட அலுவலர் சண்முகவேல் ஆசிரியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
30-Aug-2024