உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விகாஸ் வித்யாலயா பள்ளியில் மன மேலாண்மை கருத்தரங்கு

விகாஸ் வித்யாலயா பள்ளியில் மன மேலாண்மை கருத்தரங்கு

திருப்பூர் : திருப்பூர் அருகே கூலிபாளையம் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மன மேலாண்மை ஆளுமை திறன் வளர்த்துக் கொள்ளுதல் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், தன்னம்பிக்கை பேச்சாளர் லாவண்யா சோபனா பங்கேற்று மன மேலாண்மை எனும் தலைப்பில் தன்னம்பிக்கை மற்றும் சுய ஆற்றலை வளர்த்துக் கொள்வதை பற்றி சிறப்புரையாற்றினார்.பள்ளியின் புதிய அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு விகாஸ் வித்யாலயா குழுமங்களின் தலைவர் ஆண்டவர் ராமசாமி, துணைச் செயலாளர் சிவப்பிரியா மாதேஸ்வரன் தலைமை வகித்தனர்.பள்ளி முதல்வர் அனிதா வரவேற்றார். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை