/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வணிகர்கள் - சாலையோர வியாபாரிகள் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு
வணிகர்கள் - சாலையோர வியாபாரிகள் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு
அவிநாசி : அவிநாசியில் சாலையோர கடைகளை முறைப்படுத்த வலியுறுத்தி, அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் தொடர்ந்து, வருவாய் துறையினர் மற்றும் போலீசாரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.அனைத்து வியாபாரிகள் சங்கம், அனைத்து வணிகர்கள் சங்கம் மற்றும் சாலையோர வியாபாரிகள் சங்கம் ஆகியோர் மத்தியில், முத்தரப்பு பேச்சுவார்த்தை, தாலுகா அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் ஒருவர் ஒரு கடை மட்டுமே அமைத்து வியாபாரம் செய்திடவும், பொருளாதாரத்தில் பின் தங்கிய வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கிடவும், ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டுள்ள அரசு அலுவலகங்கள் முன்பு மட்டுமே கடைகள் அமைத்திடவும் முடிவு செய்யப்பட்டது.இது குறித்து, 16ம் தேதி டி.எஸ்.பி., சிவகுமார் முன்னிலையில் இறுதி முடிவு செய்யப்படும் என தாசில்தார் சந்திரசேகர் தெரிவித்தார்.