உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கனிமவள கடத்தல் அபாரம்...: இரண்டு மாவட்ட எல்லையில் அமோகம்!

கனிமவள கடத்தல் அபாரம்...: இரண்டு மாவட்ட எல்லையில் அமோகம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பல்லடம்: அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, திருப்பூர் - கோவை மாவட்ட எல்லையில், கனிமவள கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இயற்கை வளங்களை அழியாமல் பாதுகாக்க வருவாய் துறை, கனிமவளத் துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகள் உள்ளன. ஆனால், அரசியல் செல்வாக்கு, அதிகாரிகளின் ஆதரவு உள்ளிட்ட காரணங்களால், இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.இவ்வாறு, கனிமவளங்களை திருடி கடத்தும் கும்பல் தமிழகம் முழுவதும் பரவலாக செயல்படுகிறது. குறிப்பாக, திருப்பூர் கோவை மாவட்ட எல்லை பகுதியில், கனிமவள கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில், பல்லடம் உட்கோட்ட எல்லை பகுதியாக காமநாயக்கன்பாளையம், கரடிவாவி மற்றும் கோவை மாவட்ட எல்லை பகுதிகளாக சுல்தான்பேட்டை, செலக்கரிச்சல் ஆகியவற்றில், கனிம வள கடத்தல் அபாரமாக நடந்து வருகிறது. காலியாக உள்ள தரிசு நிலங்களில, ஏற்கனவே உள்ள குளம் குட்டைகள், நீரோடைகள் மற்றும் காற்றாலையை ஒட்டியுள்ள காலி நிலங்கள் உள்ளிட்டவள்றை பயன்படுத்தி கனிம வள கடத்தல் நடந்து வருகிறது.

கிராமம் வழியே மண் கடத்தல்

மாவட்ட எல்லையில் வனப்பரப்பு அதிகம் உள்ளதாலும், வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் ஆகியன பெரிய அளவு இல்லாததாலும், இதனை சாதகமாக்கும் கனிமவள கடத்தல் கும்பல்கள், சுற்றி வளைத்து கனிமவள கடத்தலில் ஈடுபட்டு வருகின்றன. இரண்டு மாவட்ட எல்லை பகுதியில் நடந்து வரும் கனிமவள கடத்தலுக்கு சில அதிகாரிகளும் துணை போகின்றனர். சோதனை சாவடிகளில் சிக்காமல் இருக்க, பல்வேறு கிராமச் சாலைகளை பயன்படுத்தும் கனிமவள கடத்தல் கும்பல், சில அதிகாரிகளின் ஆதரவுடன், 'மண்ணை பொன்னாக்கும்' செயலில் கச்சிதமாக ஈடுபட்டு வருகின்றன. மாவட்ட எல்லைகளில் உள்ள கிராமங்களை ஆய்வு செய்தால், எண்ணற்ற இடங்களில், கனிமவள கடத்தலில் ஈடுபட்டதற்கான சான்றுகள் புலப்படும். இரண்டு மாவட்டங்களுக்குமான எல்லை பகுதி என்பதால், அதிகாரிகளும் சொல்லும்படியாக கண்காணிப்பு மேற்கொள்வதில்லை. இதனால், கனிமவள கடத்தல் பல ஆண்டுகளாக தங்குதடையின்றி நடந்து வருகிறது. இதேபோல் கனிமவளங்களை சுரண்டி எடுத்துக் கொண்டே சென்றால், இப்பகுதியில் பூகம்பம் கூட வரலாம். எனவே, கனிமவள கடத்தலை தடுக்க, மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். கொள்ளை போன கனிம வளங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு உரிய விசாரணையை நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. கிராமச் சாலைகளை பயன்படுத்தும் கனிமவள கடத்தல் கும்பல், சில அதிகாரிகளின் ஆதரவுடன், மண்ணை பொன்னாக்கும் செயலில் கச்சிதமாக ஈடுபட்டு வருகின்றன


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

தமிழ்வேள்
ஜூன் 16, 2024 10:19

ஓசி பிரியாணி சாராயம் போதைப்பொருள் சினிமா கொடுத்து விட்டு தமிழனை அடிமை ஆகக்கூட விற்பனை செய்யலாம்.. அந்த நிலையில் உள்ளது தமிழகம் மற்றும் திராவிடம்


hari
ஜூன் 15, 2024 23:06

முட்டு குடுக்கும் கபோதிகள் யாரையும் இங்கே காணோம்..........


RAJA68
ஜூன் 15, 2024 22:19

கொள்ளையில் முதலமைச்சருக்கு பங்கு போகிறது என்று சொல்கிறார்கள் எப்படி இருக்கும்போது என்ன நடவடிக்கை எடுக்க முடியும்.


aa
ஜூன் 15, 2024 21:29

One can understand why BJP lost in palladam booth


sankaranarayanan
ஜூன் 15, 2024 20:06

ஆள்கடத்தல் தங்கம் கடத்தல் கரன்சி கடத்தல் பொருட்கள் கடத்தல் கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் இப்போதுதான் இந்த திராவிட பூமியிலிருந்து கனிமவள கடத்தல் என்ற கொள்ளை கூட்டம் நடத்தும் கணக்கிலடங்காது கனிம வளத்தை கொள்ளை அடித்து அண்டை நாடுகளுக்கு நடப்பதை கண்கூடா காட்சியாக பார்த்துக்கொண்டிருக்கிறோம் இதற்கு ஒரு முடிவே கிடையாதா? நாடே இல்லாமல் சென்றுவிடும் போலிருக்கிறது


குமரன்
ஜூன் 15, 2024 19:42

இது பற்றிய விரிவான செய்திகளை போடவேண்டும் தமிழ் நாடு கேரளா எல்லைகளான செங்கோட்டை புளியரை வழியாகவும் இரவு பகலாக கனிமவள கொள்ளை நடக்கிறது இதை கேட்பதற்கு யாரும் இல்லை இப்படியே போனால் வருங்கால சந்ததியினருக்கு எதுவும் இருக்காது ஏற்கனவே தென்காசி மாவட்டங்களில் சில மலைகள் கறைந்து இருந்த இடம் தெரியாமல் போனது உதாரணமாக சிவகிரி தாலுகா திருவேங்கடம் தாலுகா கடையநல்லூர் தாலுகாவை சொல்லலாம்.


V RAMASWAMY
ஜூன் 15, 2024 19:21

:பல்லடம்: அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக" இது அலட்சியமா அல்லது கண்டும் காணாமல் இருக்கும்படி எதாவது மேலிடத்து உத்திரவா என்று விசாரித்தால் தான் புரியும்.


veeramani
ஜூன் 15, 2024 19:10

தமிழக்த்தில் இருந்து சுரண்டப்படும் மணல், ஜல்லி, செங்கல்கள், கருங்கற்கள் அனைத்தும் கேரளாவிற்கு கடத்தப்படுகின்றன. இதேபோல அங்கிருந்து மருத்துவ கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுகின்றன. இதேபோல கேரளாவிலிருந்து தண்ணீரை கடத்தி தமிழ்நாட்டிற்கு கொடுக்க ஏன் லாரிகள் முயற்சி செய்யக்கூடாது


Senthil
ஜூன் 15, 2024 21:01

சரியான கருத்து


ஆரூர் ரங்
ஜூன் 15, 2024 18:53

எதற்கெடுத்தாலும் மக்களிடம் லஞ்சம் வாங்கி கெட்ட பெயரெடுப்பதற்கு பதில் கனிம வளங்களைத் திருடுவது தீயமுக ஆட்களுக்கு வசதியாக இருக்குதோ ?


சமீபத்திய செய்தி