முதல்வர் விழாவுக்கு அமைச்சர்கள் ஆய்வு
உடுமலை; உடுமலையில் முதல்வர் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு பணிகளை, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும் 23ம் தேதி, உடுமலை நேதாஜி மைதானத்தில், நடைபெறும் அரசு விழாவில், பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.இந்த விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி, பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி, திருப்பூர் கலெக்டர் மனிஷ்நாரணவரே, எஸ்.பி., யாதவ்கிரிஷ் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.மைதானத்தில், விழா மேடை அமைத்தல், பயனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கான இருக்கை வசதி மற்றும் பந்தல் அமைக்கும் பணி குறித்து இக்குழுவினர் ஆய்வு செய்தனர்.