உள்ளூர் செய்திகள்

ம.ம.க., ஆர்ப்பாட்டம்

பல்லடம்; மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, திருப்பூர் தெற்கு மாவட்ட ம.ம.க., சார்பில், பல்லடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் அப்துல் கயூம் தலைமை வகித்தார். த.மு.மு.க., மாவட்டச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் முன்னிலை வகித்தார். ம.ம.க., மாவட்ட செயலாளர் அப்சல் வரவேற்றார். மாநிலப் பிரதிநிதி அக்பர் சிறப்புரை ஆற்றினார்.மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் பரமசிவம், வி.சி.க., தொகுதி செயலாளர் ரங்கசாமி, அம்பேத்கர் மக்கள் இயக்கமாவட்ட தலைவர் தேவராஜ் உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !