உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மூத்த குடிமக்களுக்கான மொபைல் செயலி

மூத்த குடிமக்களுக்கான மொபைல் செயலி

திருப்பூர் : சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, 'Senior citizen' என்கிற மூத்த குடிமக்களுக்கான மொபைல் செயலியை கடந்த 2023, செப்., மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அருகாமையிலுள்ள முதியோர் இல்லங்கள், மருத்துவமனைகள், மக்கள் மருந்தகம், மத்திய, மாநில அரசு திட்டங்கள், மாவட்ட சட்ட ஆணையம், அதிகாரிகள் விவரம், உடற்பயிற்சி, ஆரோக்கியம் சார்ந்த அனைத்து விவரங்களும் இந்த செயலியில் இடம்பெற்றுள்ளது. மூத்த குடிமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள அனைத்து மூத்த குடிமக்களும் இந்த செயலியை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என, கலெக்டர் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ