மேலும் செய்திகள்
மொபைல் ஆப் மூலம் சீனியர் சிட்டிசன் பயன்பெறலாம்
14-Jun-2025
உடுமலை : அனைத்து மூத்த குடிமக்களும், மொபைல் செயலியை பயன்படுத்த அறிவிக்கப்பட்டுள்ளது.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, 'Senior citizen' என்கிற மூத்த குடிமக்களுக்கான மொபைல் செயலியை கடந்த 2023, செப்., மாதம் முதல் செயல்படுத்தப்பட்டுவருகிறது.அருகாமையிலுள்ள முதியோர் இல்லங்கள், மருத்துவமனைகள், மக்கள் மருந்தகம், மத்திய, மாநில அரசு திட்டங்கள், மாவட்ட சட்ட ஆணையம், அதிகாரிகள் விபரம், உடற்பயிற்சி, ஆரோக்கியம் சார்ந்த அனைத்து விபரங்களும் இந்த செயலியில் இடம்பெற்றுள்ளது.மூத்த குடிமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள அனைத்து மூத்த குடிமக்களும் இந்த செயலியை பயன்படுத்தி பயன்பெறவேண்டும் என, கலெக்டர் அறிவித்துள்ளார்.
14-Jun-2025