உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அமர்க்களமாக துவங்கியது பருவ மழை

அமர்க்களமாக துவங்கியது பருவ மழை

திருப்பூர் : நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், மாவட்டத்தில் சராசரியாக 14.59 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக, தாராபுரம் உப்பாறு அணை பகுதியில் 72 மி.மீ., - திருப்பூர் - அவிநாசி ரோட்டில் கலெக்டர் முகாம் அலுவலக பகுதியில் 67.40 மி.மீ.,க்கு கனமழை பெய்துள்ளது.திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலக பகுதியில் 60; கலெக்டர் அலுவலகச் சுற்றுப்பகுதிகளில் 40; அவிநாசி தாலுகா பகுதிகளில் 17 மி.மீ.,க்கு மிதமான மழை பதிவாகியுள்ளது.திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகச் சுற்றுப்பகுதிகளில் 15; பல்லடத்தில் 7; குண்டடத்தில் 7; காங்கயம் தாலுகா அலுவலக பகுதிகளில் 4..40 மி.மீ.,க்கு லேசான மழை பெய்துள்ளது. ஊத்துக்குளி தாலுகா அலுவலக பகுதிகளில் 1; அமராவதி அணை பகுதிகளில் 1 மி.மீ.,க்கு மிக லேசான மழை பெய்துள்ளது. நீர்ப்பிடிப்புகளில் பெய்துவரும் மழையால், அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டமும் உயரத்துவங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி, அமராவதியில் மொத்தம் 90 அடியில், 82.91 அடிக்கும்; திருமூர்த்தி அணையில் மொத்தம் 60 அடியில், 40.03 அடிக்கு நீர்மட்டம் இருந்தது.மாதத்தின் அடுத்தடுத்த நாட்கள் மழை நாட்களாக அமையவேண்டும் என்பது அனைத்து மக்களின் பிரார்த்தனை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி