உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குப்பை லாரியை தடுத்த மொரட்டுப்பாளையம் மக்கள்

குப்பை லாரியை தடுத்த மொரட்டுப்பாளையம் மக்கள்

ஊத்துக்குளி அருகே மொரட்டுப்பாளையம் ஊராட்சி, தொட்டி வளவு பகுதியில் உள்ள காலாவதியான பாறைக் குழியில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலை குப்பை கொட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.இதையறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பாறைக்குழிக்கு மிக அருகிலேயே வீடுகள் மற்றும் கோவில் உள்ளது. குப்பையால் துர்நாற்றம் வீசும்,சுகாதார கேடு ஏற்படும். எனவே, இங்கு குப்பை கொட்டகூடாது, என லாரியை தடுத்து நிறுத்தினர். மாநகராட்சி அதிகாரிகள் சமரசம் பேசியும் மக்கள் அதனை ஏற்று கொள்ளவில்லை. இதனால், குப்பையுடன் லாரிகள் திரும்பி சென்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ