உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோமாரி தடுப்பூசி முகாம் ; ஜூலை 2ல் துவங்குகிறது

கோமாரி தடுப்பூசி முகாம் ; ஜூலை 2ல் துவங்குகிறது

திருப்பூர் : தேசிய கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தின் மூலமாக, கால்நடைத்துறை சார்பில், ஆண்டுக்கு இருமுறை தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, இந்தாண்டில், 2ம் தேதி துவங்கி, 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.கலப்பின மாடுகளை, கால் மற்றும் வாயில் கோமாரி நோய் தாக்கும் அபாயம் உள்ளது. இந்நோயால், கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறையும்; சினை பிடிப்பதில் தடை ஏற்படும். எருதுகளின் பணித்திறன் குறையும்; இளம் கன்றுகளின் இறப்பு விகிதம் அதிகரிக்கும்.இந்நோயில் இருந்து கால்நடைகளை தற்காத்துக்கொள்ள, ஆறு மாத இடைவெளியில், ஆண்டுக்கு இருமுறை இலவச கோமாரி தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.மாவட்டம் முழுவதும் உள்ள கால்நடைகளுக்கு, கால்நடை நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம் வாயிலாக தடுப்பூசி செலுத்தி பயன்பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை