அரசு கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
பல்லடம் : பல்லடம் அரசு கல்லுாரியில், கூடுதல் பாடத்திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. பல்லடம் அரசு கலைக் கல்லுாரி ஆங்கிலத்துறை மற்றும் டி.ஆர்.ஹெச்., அகாடமியுடன் இணைந்து கூடுதல் பாடமாக, 'தனிப்பட்ட முத்திரை' புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் மணிமேகலை தலைமை வகித்தார். பேராசிரியை கிருஷ்ணவேணி வரவேற்றார்.டி.ஆர்.ஹெச்., அகாடமியின் நிறுவனர் ரொனால்ட் ஹெர்டின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், ''தனிப்பட்ட முத்திரை புரிந்துணர்வு ஒப்பந்தம் வாயிலாக, கல்லுாரியின் தரம் உயரும். மாணவர்கள் தங்கள் வேலை வாய்ப்புக்காக செல்லும்போதும், அவர்களுக்கு இது பெரிதும் பயன்படும். மேலும், மாணவர்கள் தங்களது தனித்துவமான திறமைகளை மேம்படுத்திக் கொள்ள இது உதவும்,'' என்றார்.முன்னதாக, கூடுதல் பாடத்துக்கான ஒப்பந்தம் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. தொடர்ந்து, புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கான ஆவணங்களை கல்லுாரி முதல்வர் மணிமேகலை வழங்க, டி.ஆர்.ஹெச்., அகாடமி நிறுவனர் பெற்றுக்கொண்டார். மாணவி நிஸ்வானி நன்றி கூறினார்.