உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மண் திட்டுகள் விபத்து அபாயம்

மண் திட்டுகள் விபத்து அபாயம்

பல்லடம்; பல்லடம்- - மங்கலம் ரோடு, மங்கலம், வஞ்சிபாளையம் வழியாக அவிநாசி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கிறது. அரசு பள்ளி கல்லுாரிகள், போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன், கோர்ட், பத்திர அலுவலகம் உள்ளிட்ட அதிகப்படியான அரசு அலுவலகங்கள் உள்ள இந்த ரோட்டில், ஏராளமான சரக்கு வாகனங்கள், கண்டெய்னர்கள், டிப்பர் லாரிகள், கறிக்கோழி வேன்கள் உள்ளிட்டவை அதிக அளவில் வந்து செல்கின்றன. வாகன போக்குவரத்து நிறைந்த இந்த ரோட்டை மண் திட்டுகள் ஆக்கிரமித்து வருகின்றன. ரோட்டின் பாதி இடத்தை மண் திட்டுகள் ஆக்கிரமித்துள்ளதால்,ரோடு சுருங்கி வருகிறது. இவ்வழியாக வரும் வாகனங்கள் தடுமாறிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள், மண் திட்டுகளால் சரிந்து, விபத்து அபாயத்தை சந்தித்து வருகின்றன.மங்கலம் ரோட்டில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில், மண் திட்டுக்களால் விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது. எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி, ரோட்டில் பரவலாக உள்ள மண் திட்டுகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ