நகராட்சி வளர்ச்சி பணிகள் அதிகாரிகள் குழு ஆய்வு
உடுமலை, ; உடுமலை நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும், பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணி, நகராட்சி பூங்கா, வாரச்சந்தையில் கடைகள் கட்டுமான பணி உள்ளிட்ட வளர்ச்சி பணிகளை, நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் சிவராஜ், மண்டல இயக்குனர் இளங்கோவன், மண்டல பொறியாளர் பாலசந்தர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.ஆய்வின் போது, நகராட்சித்தலைவர் மத்தீன், கமிஷனர் சரவணகுமார், பொறியாளர் சண்முகவடிவு பங்கேற்றனர். வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினர்.