நகராட்சி கூட்டம்
திருப்பூர் : காங்கயம் நகராட்சி மன்றத்தின் அவசரக் கூட்டம் நேற்று நடைபெற்றது.காங்கயம் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ் தலைமை வகித்தார். கமிஷனர் பால்ராஜ், துணைத் தலைவர் கமலவேணி முன்னிலை வகித்தனர்.இக்கூட்டத்தில், நகராட்சிப் பகுதியில் உள்ள செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்றும் போது பணியாளர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும்; கழிவுகளை நகராட்சியின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி, அகற்ற வேண்டும். அரசு அனுமதி பெற்ற வாகனங்கள் பயன்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.