உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இசைஞானியார் குருபூஜை  சிவனடியார்கள் வழிபாடு

இசைஞானியார் குருபூஜை  சிவனடியார்கள் வழிபாடு

திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், நேற்று இசைஞானியார் குருபூஜை நடந்தது.63 நாயன்மார்களில், மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவர் இசைஞானியார்; சுந்தரமூர்த்தி நாயனாரின் தாயார். சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில், இசைஞானியார் குருபூஜை நடக்கிறது. அதன்படி, திருப்பூர் விஸ்வேஸ்வர் கோவிலில் நேற்று குருபூஜை நடந்தது.திருப்பூர் அர்த்தசாம பூஜை அடியார்கள் திருக்கூட்டம், மாணிக்கவாசகர் திருக்கூட்டம் சார்பில், குருபூஜை நடந்தது. சிவனடியார்கள், தேவாரம் மற்றும் திருவாசக பதிகங்களை பாராயணம் செய்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ