முத்துார் விவேகானந்தா மெட்ரிக் பள்ளி சாதனை
திருப்பூர் : முத்துார் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 2024 - 25 கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.இப்பள்ளி மாணவர்கள் பிரனேஷ், ரக் ஷித், 500க்கு 495 மிப்பெண் பெற்றுள்ளனர். பிரனேஷ், தமிழ், ஆங்கில பாடங்களில் தலா 98, கணிதம், அறிவியலில், 100, சமூக அறிவியலில் 99 மதிப்பெண் பெற்றுள் ளார். ரக் ஷித், தமிழ், சமூக அறிவியலில், 98; ஆங்கிலத்தில் 99; கணிதம், அறிவியல் பாடங்களில் 100 மதிப்பெண் பெற்றுள்ளார். 493 மதிப்பெண்களுடன் தர்ஷினி, ரோகித் இரண்டாமிடம் பிடித்துள்ளனர். அவர், தமிழில், 98, ஆங்கிலத்தில் 99, கணிதம், 96, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.மாணவ, மாணவியர் 11 பேர், 490 மதிப்பெண்களுக்கு மேல், 17 பேர், 480க்கு மேல், 20 பேர், 470க்கு மேல், 31 பேர், 450க்கு மேல், 59 பேர், 400க்கு மேல் மதிப்பெண் பெற்று சாதனைபடைத்துள்ளனர். 30 மாணவ, மாணவியர் சென்டம் அடித்துள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்கள் பிரணேஷ், ரக் ஷித், தர்ஷினி, ரோகித், தேவிப்பிரியா ஆகியோருக்கு, பள்ளி தாளாளர் சண்முகம், ரொக்க தொகை மற் றும் பரிசு கேடயம், சான்று வழங்கி பாராட்டினார்.பள்ளி செயலாளர் சக்திவேல், நிர்வாக இயக்குனர் அசோக்குமார், பள்ளி முதல்வர் நடராஜ் மற்றும் பெற்றோர், மாணவர்கள், பாராட்டு விழாவில் பங்கேற்றனர்.