உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  மர்ம பொருள் வெடித்ததால் கோர்ட் அருகே பரபரப்பு

 மர்ம பொருள் வெடித்ததால் கோர்ட் அருகே பரபரப்பு

அவிநாசி: திருப்பூர் மாவட்டம், அவிநாசி தாலுகா அலுவலக வளாகத்தில், கிளை சிறைச்சாலை, மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உட்பட, பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. கோர்ட் அருகே நேற்று மாலை, 4:00 மணியளவில், திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதனால், தாலுகா அலுவலகத்திற்கு எதிரே உள்ள மருந்து கடை, பியூட்டி பார்லர் மற்றும் வழக்கறிஞர் அலுவலகம் ஆகியவற்றில் இருந்த மேற்கூரை, ஜன்னல் கண்ணாடிகள் பெயர்ந்து மற்றும் உடைந்து விழுந்தன. தாலுகா ஆபீஸ் காம்பவுண்ட் சுவரும் சேதமானது. போலீசார் கூறுகையில், 'வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை, அவிநாசி ஜே.எம்., கோர்ட்டில் போலீசார் ஒப்படைப்பர். நேற்று மாலை, மது பாட்டில்களை கோர்ட் பணியாளர் தீயிட்டு எரித்தபோது, அவை பயங்கர சத்தத்துடன் வெடித்தது தெரிய வந்தது. இதுகுறித்து விசாரிக்கிறோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ