உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாயமான மாணவன் மீட்பு

மாயமான மாணவன் மீட்பு

திருப்பூர் அருகேயுள்ள ஒரு ஊராட்சியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவர், கடைக்குச் செல்வதாக கூறி சைக்கிளில் சென்றார்; வீடு திரும்பவில்லை. பெருமாநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து மாணவனை தேடினர். தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் மாணவன் சுற்றித்திரிந்துள்ளார். சந்தேகப்பட்டு போலீசார் விசாரித்தபோது, 'சரியாகப் படிக்கவில்லை' என்று பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு மாயமானது தெரியவந்தது. மாணவனுக்கு அறிவுரை கூறி, பெற்றோருடன் போலீசார் அனுப்பிவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ