உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காமராஜர் சிலை நிறுவ நாடார் சங்கம் தீர்மானம்

காமராஜர் சிலை நிறுவ நாடார் சங்கம் தீர்மானம்

பல்லடம்; பல்லடம் நாடார் சங்கத்தின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம், என்.ஜி.ஆர்., ரோடு சங்க அலுவலகத்தில் நடந்தது. சங்கத் தலைவர் பொன்னையா தலைமை வகித்தார். செயலாளர் பாஸ்கரன் வரவேற்றார். என்.ஜி.ஆர்., ரோட்டில் காமராஜர் திடல் உள்ளது. கடந்த காலத்தில் காமராஜர் சிலையுடன் இருந்த இப்பகுதி, இன்று பெயருக்கு மட்டுமே காமராஜர் திடலாக உள்ளது. அப்பகுதியில், மீண்டும் காமராஜர் சிலை நிறுவ வேண்டும். சிலை நிறுவ, பல்லடம் நகராட்சி கமிஷனரிடம் அனுமதி கேட்டு மனு வழங்க தீர்மானிக்கப்பட்டது. நிர்வாகிகள் நாராயணன், ராஜன், சுரேஷ், பிர்லா போஸ், தனசீலன், சின்னதுரை உட்பட பலர் பங்கேற்றனர். சுந்தர்ராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !