உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நல்லுார் சி.எஸ்.ஐ., சர்ச் அசனப் பண்டிகை விழா

நல்லுார் சி.எஸ்.ஐ., சர்ச் அசனப் பண்டிகை விழா

கிறிஸ்தவர்கள் தங்கள் பங்குக்கு உட்பட்ட சர்ச்களில் ஆண்டு தோறும், அறுவடை திருவிழா எனப்படும் ஆண்டவருக்கு நன்றி தெரிவிக்கும் விழாவை நடத்துகின்றனர். தங்கள் வருவாயில் இருந்து காணிக்கை செலுத்தி சிறப்பு பிரார்த்தனை மற்றும் ஐக்கிய விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்பர்.நல்லுார் சி.எஸ்.ஐ., சர்ச்சில் இந்த நன்றி தெரிவிப்பு விழா, அசனப் பண்டிகை நேற்று நடந்தது. சர்ச் ஆயர் ரமேஷ் ஜோசப் தலைமையில் சிறப்பு திருப்பலி பூஜை மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. சபை ஊழியர் சந்தோஷ், போதகசேகர குழு திருமண்டல குழு நிர்வாகிகள் மற்றும் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விருந்து நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ