நடராஜா தியேட்டர் பாலம் இன்று திறப்பு
திருப்பூர்: திருப்பூரின் மையப்பகுதியான நொய்யல் ஆற்றின் வடக்கு கரையில், குமரன் ரோட்டின் குறுக்கில், எம்.ஜி.ஆர். சிலை சிக்னல் அருகே, சுரங்க பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. இதற்காக, நடராஜா தியேட்டர் பகுதி நொய்யல் புதிய பாலம் பயன்பாட்டுக்கு திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நேற்று காலை கலெக்டர் மனிஷ் நாரணவரே, மாநகராட்சி கமிஷனர் அமித் ஆகியோர் அப்பகுதியில் ஆய்வு நடத்தினர். இன்று அமைச்சர் சாமிநாதன் பாலத்தை திறந்து வைக்கிறார். அதன் பின், பாலத்தில் போக்குவரத்து அனுமதிக்கப்படும். அதற்கேற்ப போக்குவரத்து மாற்றங்கள் குறித்து போலீசார் அறிவிப்பு வெளியிடுவர்.