உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேசிய குத்துச்சண்டை போட்டி; ஏ.வி.பி., மாணவர் தகுதி

தேசிய குத்துச்சண்டை போட்டி; ஏ.வி.பி., மாணவர் தகுதி

திருப்பூர்; தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கம், சென்னை மாநகர குத்துச்சண்டை சங்கம் சார்பில், மாநில அளவில் குத்துச்சண்டை போட்டி சென்னையில் நடந்தது. இப்போட்டியில், மிக இளையோர் பிரிவில், ஏ.வி.பி., டிரஸ்ட் நேஷனல் மெட்ரிக் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஆசிப் தங்கம் வென்றார். இவர் தேசிய போட்டிக்கு தகுதி பெற்றார். வெற்றி பெற்ற மாணவனைபள்ளி தாளாளர் கார்த்திகேயன், பள்ளி முதல்வர் பிரியாராஜா, ஒருங்கிணைப்பாளர் அபிதாபானு, மேலாளர் ராமசாமி, உடற்கல்வி ஆசிரியர்கள்உட்பட பலர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !